கட்டாரிலிருந்து 45 பேர் உள்ளிட்ட 73 பேர் நாடு திரும்பினர்

கட்டாரிலிருந்து 45 பேர் உள்ளிட்ட 73 பேர் நாடு திரும்பினர்-81 Persons Including 45 From Doha-Qatar Returned From Abroad

இன்று (14) காலை கட்டாரிலிருந்து 45 பேர் உள்ளிட்ட 73 பேர் நாடு திரும்பியுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை QR 668 எனும் விமானம் மூலம் 39 பேரும், UL 218 எனும் விமானம் மூலம் மேலும் 06 பேரும் என, 45 பேர் கட்டாரின் டோஹா நகரிலிருந்து நாடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் இன்று அதிகாலை 6E 9034 எனும் விமானம் மூலம் இந்தியாவின் சென்னை நகரிலிருந்து 24 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

அது மாத்திரமன்றி இன்று (14) நண்பகல் EY 264 எனும் விமானம் மூலம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரிலிருந்து 4 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பிய அனைவரும், முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...