லொறி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து; இருவர் காயம்

பூண்டுலோயாவிலிருந்து கம்பளைக்கு பெயிண்ட் (வர்ணப்பூச்சு) வகைகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியதில், இருவர் காயமடைந்துள்ளனர்.

பூண்டுலோயா – கொத்மலை பிரதான வீதியில் பாளுவத்த பகுதியில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இன்று (10) மதியம் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக, பூண்டுலோயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட உறக்க கலக்கம் காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததனால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், அவர்கள் இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி கொத்மலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - ஜி.கே. கிருஷாந்தன்)    


Add new comment

Or log in with...