ஹட்டன் நகரில் கொவிட்-19 சுகாதார விதிமுறைக்கமைய வியாபாரத்தை முன்னெடுக்காத வர்த்தக நிலையங்கள் சில தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அம்பகமுவ பிரதேச கொவிட் -19 பாதுகாப்பு விசேட வைத்திய அதிகாரிகளால் இன்று (09) ஹட்டன் நகரில் மேற்கொண்ட சோதனையின்போதே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட சுகாதார திணைக்களத்தினால் வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளுக்கு கொவிட் -19 சுகாதார அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு, அதற்கமைய வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டது
இந்நிலையில், இன்று அம்பகமுவ பிரதேச கொவிட்-19 தொடர்பான விசேட வைத்திய அதிகாரிகளினால் ஹட்டன் நகரில் சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது
இதன்போது சில விற்பனை நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், மிகவும் மோசமான நிலையில் சுகாதார முறையை மீறிய வியாபார நிலையங்கள், ஹோட்டல்கள் சில தற்காலிகமாக மூடப்பட்டதாக, சுகாதார வைத்திய அதிகாரி சிஷான் பேமசிறி தெரிவித்தார்.
மேலும் விற்பனை நிலையங்களிலிருந்து மீட்கப்பட்ட உணவு பொருட்கள் சிலவும் அழிக்கப்பட்டதாதவும், அவர் தெரிவித்தார்
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - எம். கிருஸ்ணா)
Add new comment