ஜப்பான், அவுஸ்திரேலியா, கட்டாரிலிருந்து 34 பேர் வருகை

ஜப்பான், அவுஸ்திரேலியா, கட்டாரிலிருந்து 34 பேர் வருகை-34 Persons Returned from Qatar-Australia-Japan-Sent to Quarantine NOCPCO

இன்றையதினம் (06) அவுஸ்திரேலியா, கட்டார், ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து 34 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இன்று காலை கட்டாரின் டோஹா நகரிலிருந்து QR 668 எனும் விமானம் மூலம் ஒருவரும், EY 607 எனும் விமானம் மூலம் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து 16 பேரும், UL 455 எனும் விமானம் மூலம் ஜப்பானின் நரீட்டா நகரிலிருந்து 17 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இவ்வாறு நாடு திரும்பிய அனைவரும் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று (05), கட்டாரிலிருந்து வந்த QR 668 விமானம் மூலம் 22 பேர் இலங்கை வந்தடைந்திருந்தனர். குறித்த நபர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...