களுத்துறையில் மற்றுமொரு பிரதேசம் விடுவிப்பு

களுத்துறையில் மற்றுமொரு பிரதேசம் விடுவிப்பு-Badugama New Colony Released from Isolated List

களுத்துறை மாவட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட, மத்துகமை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதுகம நவ ஜனபதய (புதிய குடியிருப்பு) பிரதேசம், தனிமைப்படுத்தல் பட்டியலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 18ஆம் திகதி, களுத்துறை மாவட்டத்தின், மத்துகமை பிரதேச செயலக பிரிவிலுள்ள ஓவிட்டிகல, பதுகம, பதுகம நவ ஜனபதய (புதிய குடியிருப்பு‌) ஆகிய கிராமங்கள்‌ தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பெயரிடப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி குறித்த 3 கிராமங்களில் ஓவிட்டிகல, பதுகம ஆகிய கிராமங்கள் விடுவிக்கப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து இன்று (06) மத்துகமை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதுகம நவ ஜனபதய (புதிய குடியிருப்பு) பிரதேசம் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...