கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகம் தற்காலிக மூடல்

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகம் தற்காலிக மூடல்-A Staff Tested Positive For COVID19-Central Mail Exchange Temporarily Closed

கொழும்பிலுள்ள மத்திய தபால் பரிமாற்றகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள, தபால் பரிமாற்றகத்தில் பணி புரியும் அலுவலர் ஒருவருக் கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

தபால் மாஅதிபர், ரஞ்சித் ஆரியரத்ன இதனை அறிவித்துள்ளார்.

அதற்கமைய, அனைத்து செயற்பாடுகள் மற்றும் பொதுமக்கள் நடவடிக்கைகள் யாவும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பிரிவின் ஆலோசனைக்கமைய, குறித்த அலுவலகச் சூழல் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து, பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

PDF File: 

Add new comment

Or log in with...