சைக்கிளில் சென்றவர் யானை தாக்கி பலி

முல்லைத்தீவு, மாங்குளம் மல்லாவி வீதியில் 1ஆம் கட்டைப்பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு (03) இடம்பெற்றுள்ளது.

புனிதநகர் சந்தி, கற்கோவளம், பருத்துறையைச் சேர்ந்த ஆனந்தராசா விஜயானந்தம் (37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கூலித்தொழில் செய்துவரும் இவர், தொழில் முடிந்து மாங்குளம் மல்லாவி வீதி 1ஆம் கட்டை பகுதியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவேளை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இவரது சடலம் மாங்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டு, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

(புதுக்குடியிருப்பு விசேட நிருபர் - முல்லைக்கீதன்)


Add new comment

Or log in with...