கடற்றொழிலுக்குச் சென்ற இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு | தினகரன்

கடற்றொழிலுக்குச் சென்ற இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

கிளிநொச்சி, நாச்சிக்குடாவில் கடற்றொழிலுக்குச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (31)  இடம்பெற்றுள்ளது.

நாச்சிக்குடா கடல்பரப்பில் களங்கட்டி பணியில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் நீரில் மூழ்கிய நிலையில் மீனவர்களின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வந்ததுடன், அவரை முழங்காவில் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த 3 மாதக் குழந்தையொன்றின் தந்தையான எம். யோனகன் (25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை நாச்சிக்குடா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

(எஸ்.என். நிபோஜன்)


Add new comment

Or log in with...