ஊரடங்கை தவிர்த்துச் சென்ற 550 பேர் தனிமைப்படுத்தலில்

ஊரடங்கை தவிர்த்துச் சென்ற 550 பேர் தனிமைப்படுத்தலில்-550 Under Quarantine Who Left From Western Province by Violating Quarantine Law-Ajith Rohana

மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை தவிர்த்து, தாம் தங்கியிருந்த பிரதேசங்களிலிருந்து சென்ற 550 பேர் நாடு முழுவதிலுமிருந்து அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை தவிர்க்கும் வகையில், கடந்த வியாழக்கிழமை (29) காலை முதல் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேறிய 454 பேர் நேற்று வரை அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டு தற்போது மொத்தமாக சுமார் 550 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, பண்டாரவளை, மட்டக்களப்பு, அம்பாறை, தங்காலை, நுவரெலியா, மாத்தறை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில், ஹோட்டல்கள் உள்ளிட்ட தங்குமிடங்களிலிருந்து குடும்பமாக அல்லது தனியாக தங்கியிருந்த வேளையில் அவர்கள் தங்கியிருந்த இடங்களிலேயே, பிரதேச சுகாதார அதிகாரிகளின் உத்தரவுக்கமையஇவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறும் என, அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நடவடிக்கையில் குறித்த நபர்களை அடையாளம் காண முடியாது போகும் நிலை ஏற்படும் நிலையில், மீண்டும் திங்கட்கிழமை (02) மேல் மாகாணத்திற்குள் நுழையும் இடங்களில் கடுமையாக சோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான தற்போதைய நிலவரத்திற்கு: www.thinakaran.lk/COVID-19


Add new comment

Or log in with...