மற்றுமொரு பாராளுமன்ற ஊடகவியலாளருக்கு தொற்று

மற்றுமொரு பாராளுமன்ற ஊடகவியலாளருக்கு தொற்று-2nd Parliament Correspondent Tested Positive for

பாராளுமன்ற ஊடக அறிக்கையிடல் கடமையில் ஈடுபடும் மற்றுமொரு ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி, சண்டே டைம்ஸ் (Sunday Times) பத்திரிகையில் கடமையாற்றும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மவ்பிம (මව්බිම) பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் பாராளுமன்ற அறிக்கையிடல் கடமையில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒக்டோபர் 21, 22ஆம் திகதி, இடம்பெற்ற 20ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தில் 'சண்டே டைமஸ்' ஊடகவியலாளர் கலந்து கொண்டிருந்த நிலையில், அன்றைய தினங்களில் பாராளுமன்ற ஊடக அறிக்கையிடல் கடமையில் ஈடுபட்டிருந்தவர்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு, சுகாதாரப் பிரிவு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...