9 உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சி பகுதியில் ஆசனம் வழங்கவும்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு (சமகி ஜன பலவேகய) நாடாளுமன்ற குழு முடிவெடுத்தபோதும், அதனை மீறி சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற சபை நடவடிக்கையின்போது  ஆசன ஒதுக்கீடு செய்யும்போது  ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற குழுவுக்கு புறம்பாக, ஆளும் கட்சி தரப்பில் ஆசனம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் பிரதான கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல,   சபாநாயகரிடம் கடிதம் மூலம் இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

  • டயனா கமகே
  • அரவிந்தகுமார்
  • இஷாக் ரஹ்மான்
  • பைசல் காசிம்
  • எச்.எம்.எம். ஹரிஸ்
  • எம்.எஸ். தெளபீக்
  • நஸீர் அஹமட்
  • ஏ.ஏ.எஸ்.எம். ரஹீம்
  • எஸ்.எம்.எம். முஷாரப் 

ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே  பாராளுமன்றத்தில் தனியாக ஆசனங்களை ஒதுக்கும்படி  சபாநாயருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  

(எம்.ஏ.அமீனுல்லா)  


Add new comment

Or log in with...