நுவரெலியாவிற்கு சுற்றுலா வருவதை தவிர்க்கவும் | தினகரன்

நுவரெலியாவிற்கு சுற்றுலா வருவதை தவிர்க்கவும்

நுவரெலியாவிற்கு சுற்றுலா வருவதை தவிர்க்கவும்-COVID19-Do Not Tour Nuwar Eliya-Request

நுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, நுவரெலியா மாவட்டச்  செயலாளர் ரோஹண புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருவது உகந்ததல்ல எனவும்,   இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், நுவரெலியா பூங்கா மற்றும் கிரேகரி ஏரி உள்ளிட்ட அனைத்து சுற்றுலா பகுதிகளும் மூடப்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ள மாவட்டச் செயலாளர் ரோஹண புஷ்பகுமார, அவ்வாறு வருவோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - எம். கிருஸ்ணா) 


Add new comment

Or log in with...