கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளில் PCR பரிசோதனை | தினகரன்

கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளில் PCR பரிசோதனை

கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளில் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மட்டக்குளி சமித்புர, தெமட்டகொட, பொரளை, சுவர்ணா வீதி, வைத்தியா வீதி ஆகிய பகுதிகளில் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையூடாக 200 கொரோனா தொற்று உறுதியான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார்.

இதேவேளை நேற்று மட்டும் நாடு முழுவதும் ஒரே நாளில் நடத்தப்பட்ட அதிக எண்ணிக்கையிலான அதாவது 9,619 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் எண்ணிக்கை 4 இலட்சத்து 60 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.


Add new comment

Or log in with...