ஹற்றன் நகரில் மேலும் 10 பேருக்கு கொரோனா

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்

ஹற்றன் பகுதியில் 10 கொரோனா தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டதன் பின்னர் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஹற்றன் நகர பகுதிக்கு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இப் பகுதியில் பல கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார். அதேவேளை டிக்கோயா மற்றும் ஹற்றன் நகரங்களில் உள்ள கடைகளை மூடுவதற்கும் தொற்று நீக்கம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

ஹற்றன் நகரிலுள்ள மீன் கடையொன்றில் இரண்டு நபர்கள் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றதாகவும் அதன் பின்னர் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதாகவும் முன்னதாக கண்டறியப்பட்டது.இந் நிலையில் தற்போது இப் பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.

 

ஹற்றன் விசேட நிருபர்


Add new comment

Or log in with...