நிதி நிறுவனத்தில் கத்திக்குத்து; பெண் பலி | தினகரன்

நிதி நிறுவனத்தில் கத்திக்குத்து; பெண் பலி

ஹொரவபொத்தானை நகரிலுள்ள தனியார் கடன் வழங்கும் நிதி நிறுவனமொன்றிற்குள் வைத்து பெண்ணொருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று  (26) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தனது கணவருடன் குறித்த கடன் வழங்கும் நிதி நிறுவனத்திற்கு  முச்சக்கரவண்டியில் வருகை தந்து,  கணவருக்கு முகக்கவசம் இல்லாததினால் தனது பிள்ளையை வைத்துக்கொண்டு  முன்னால் நின்றபோது, இனந்தெரியாத நபரொருவர் நிதி நிறுவனத்திற்குள் புகுந்து குறித்த பெண் மீது கத்தியால் குத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயாரான ஹொரவபொத்தானை, 122 கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட லேவாசபிரிவெவ பியதாசகே தம்மிகா பிரியதர்ஷினி (34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஹொரவபொத்தானை பொலிசார் தெரிவித்தனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...