மழை: கிழக்கு, ஊவா, வடமத்தி; முல்லை, வவுனியா, மாத்தளை | தினகரன்

மழை: கிழக்கு, ஊவா, வடமத்தி; முல்லை, வவுனியா, மாத்தளை

மழை: கிழக்கு, ஊவா, வடமத்தி; முல்லை, வவுனியா, மாத்தளை-Weather Forecast Rain

கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா, மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...