பேருவளை, அளுத்கம, பயாகல ஊரடங்கு தளர்த்தப்படாது

பேருவளை, அளுத்கம, பயாகல ஊரடங்கு தளர்த்தப்படாது-Beruwala-Aluthgama-Payagala Curfew Continues Until Further Notice

பேருவளை, அளுத்கம, பயாகல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தினால் குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (23) இரவு களுத்துறை மாவட்டத்தில், பேருவளை, அளுத்கம, பயாகல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு, நாளை திங்கட்கிழமை (26) அதிகாலை 5.00 மணி வரை, ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...