கம்பஹா ஊரடங்கு தொடரும்; நாளை மருந்தகங்கள் திறப்பு

கம்பஹா ஊரடங்கு தொடரும்; நாளை மருந்தகங்கள் திறப்பு-Gampaha District Curfew Continues-Pharmacies and Essential Food Selling Shops Open Tomorrow

- வங்கிகளை திறக்கவும் அனுமதி; ஊழியர்கள் அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தவும்

கம்பஹா மாவட்டத்தல்‌ தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல்‌ ஊரடங்கு சட்டம்‌ மீண்டும்‌ அறிவிக்கும்‌ வரையில்‌ தொடர்ந்து அமுலில்‌ இருக்கும்‌ என, கொவிட்‌ 19 வைரசு தொற்றைத்‌ தடுக்கும்‌ தேசிய செயற்பாட்டு மையம்‌ அறிவித்துள்ளது.

இருப்பினும்‌ கம்பஹா மாவட்டத்தில்‌ பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நாளைய தினம்‌ அதாவது 2020 அக்டோபர்‌ மாதம்‌ 26ஆம்‌ திகதி காலை 8 மணி தொடக்கம்‌ இரவு 10 மணி வரையில்‌ அத்தியாவசிய உணவுப்‌ பொருட்கள்‌ விற்பனை நிலையங்கள்‌ மற்றும்‌ மருந்தகங்கள்‌ திறந்திருக்கும்‌ என கொவிட்‌ 19 வைரசு தொற்றைத்‌ தடுக்கும்‌ தேசிய செயற்பாட்டு மையம்‌ மேலும்‌ தெரிவித்துள்ளது..

நாளைய தினம் (26) அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிக் கிளைகளும் திறக்கப்படும் எனவும், என, கொவிட்‌ 19 வைரசு தொற்றைத்‌ தடுக்கும்‌ தேசிய செயற்பாட்டு மையம்‌ அறிவித்துள்ளது.

குறித்த கிளைகளை திறப்பது தொடர்பில் அவசியமான ஊழியர்கள் தங்களது அலுவலக அடையாள அட்டைகளை பயன்படுத்தி அந்தந்த கிளைகளுக்கு சமூகமளிக்கு முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...