Saturday, October 24, 2020 - 3:38pm
கொழும்பு - கொத்தட்டுவ, முல்லேரியா பிரதேசங்களில் இன்று (24) இரவு 7.00 மணி முதல், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக, கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 22ஆம் திகதி முதல் கொழும்பில், மட்டக்குளி, முகத்துவாரம் (மோதறை), ப்ளூமெண்டல், கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டி, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுகளிலும், நேற்று (23) முதல் மருதானை, தெமட்டகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் மறுஅறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment