அத்தியாவசிய ஊழியர்கள் பயணிக்க தடையில்லை | தினகரன்

அத்தியாவசிய ஊழியர்கள் பயணிக்க தடையில்லை

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் DIG

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள இடங்களில் அத்தியாவசிய சேவை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள், பயணங்களை மேற்கொள்வதில் தடையில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மின்விநியோகம், நீர் வழங்கல், தொடர்பாடல் முதலான துறைகளைச் சேர்ந்தவர்கள், தமது கடமைக்குரிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பயணம் செய்ய முடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். கொழும்பு மாவட்டத்தின் ஐந்து பொலிஸ் பிரிவுகளில் (22) காலை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, முகத்துவாரம், புளுமென்டல், கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கம்பஹா மாவட்டத்தின் 33 பொலிஸ் பிரிவுகளிலும், குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டி, கிரிஉல்ல, நாரம்மல, தும்மலசூரிய, பன்னல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலிலுள்ளது.


Add new comment

Or log in with...