கோமரங்கடவலவில் ஆணின் சடலம் மீட்பு | தினகரன்

கோமரங்கடவலவில் ஆணின் சடலம் மீட்பு

திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் ஆணொருவரின் சடலம்  இன்று (21) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கோமரங்கடவல-திறப்பன பகுதியைச் சேர்ந்த வெலிகம ஆராய்ச்சிகே  அஜித் வசந்தகுமார டயஸ் (53) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது-

திருகோணமலை மேல் நீதிமன்றில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் இன்றையதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்ததாகவும், நேற்றைய தினம் வழக்கு தொடர்பில் சட்டத்தரணி தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து வழக்கிற்கு வருகை தரும்போது அதிகளவிலான பணத்தை கொண்டு வருமாறும் கேட்டுள்ளார்.

இந்நிலையில்  சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில்  கடமையாற்றும் அவரது மனைவியிடம் வழக்கிற்கு செல்வதற்கு பணம் தேவைப்படுவதாக தெரியப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இன்று காலை வழமைபோன்று தேநீர் ஊற்றிவிட்டு கணவரை பார்த்தபோது கணவர் இல்லாதபோது வெளியே சென்று பார்த்தபோது அவர் சடலமாக காணப்பட்டதாகவும் இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதாகவும் மனைவி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இச்சடலத்தை  திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி  ஏ.எஸ்.எம்.ரூமி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கட்டளையிட்டார்.

இம்மரணம் தொடர்பில் கோமரங்கடவல  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர்-அப்துல்சலாம் யாசீம்)

 


Add new comment

Or log in with...