கடற்கரையோரத்தில் ஆணின் சடலம் மீட்பு | தினகரன்

கடற்கரையோரத்தில் ஆணின் சடலம் மீட்பு

கடற்கரையோரத்தில் ஆணின் சடலம் மீட்பு-Trincomalee Beach-Body Found

திருகோணமலை, அலஸ்தோட்டம்  கடற்கரையோரத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சடலம் இன்று ( 19) காலை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டவர் பள்ளத்தோட்டம் பகுதியில் தனிமையாக வாழ்ந்து வந்த திருமணமாகாத, 46 வயதுடைய நபர் எனவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கடற்கரையோரத்தில் ஆணின் சடலம் மீட்பு-Trincomalee Beach-Body Found

இவரது சடலம் தற்போது அலஸ் தோட்டம் பகுதியில் உள்ள கடற்கரையோரத்திலிருந்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி  பொலிசார் தெரிவித்தனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...