OPPO Watch மற்றும் OPPO Enco W51 வெளியீட்டுக்குத் தயார்; முற்பதிவு ஆரம்பம்

OPPO Watch மற்றும் OPPO Enco W51 வெளியீட்டுக்குத் தயார்; முற்பதிவு ஆரம்பம்-OPPO Watch-Enco W51 to be Launched

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட OPPO கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்த OPPO Sri Lanka தயாராக உள்ளது. நீர் உட்புகாதது என்பதுடன், Google இன் Wear OS இனால் இயக்கப்படுகிறது. அத்துடன் OPPO Enco W51 ஆனது, OPPO ஒலியியலின் கீழான, இரைச்சலை இல்லாமல் செய்யும் (active noise cancellation -ANC) முதலாவது தரம் மிக்க வயர்லெஸ் ஹெட்போனையும் அறிமுகப்படுத்துகிறது.

GoogleTM apps மற்றும் அதன் சேவைகளின் முழு தொகுப்பையும், தங்கள் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட முறைமைகளுக்கு இடையில் ஒரே தடவையில் தங்கு தடையின்றி எளிதாக மாற்ற விரும்பும் எவருக்கும் OPPO Watch சிறந்ததாக அமைகின்றது. OPPO Enco W51 ஹெட்ஃபோன்கள் குறிப்பாக இளைஞர்களை மையப்படுத்தியது என்பதோடு, ஒரே தடவையில் தங்கு தடையின்றி கிட்டத்தட்ட அனைத்து வாடிக்கையாளர் பிரிவினருக்கும் ஏற்றதாக அமையவுள்ளது.

வாழ்க்கைக்காக வடிவமைக்கப்பட்ட மற்றும் மிக உயர்ந்த அனுபவத்திற்காக வடிவமைக்கப்பட்ட OPPO Watch ஆனது, 46 மிமீ அகலத்தை கொண்டதோடு, eSIM/ LTE அல்லது WiFi இணைப்பை கொண்டதாக காணப்படுகிறது. இது 6,000-series அலுமினிய alloy சட்டத்தைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், stunning Black (கறுப்பு) அல்லது Glossy Gold (தங்க நிறம்) ஆகிய நிறங்களில் வெளிவருகிறது.

உடற்பயிற்சிகளின் கண்காணிப்புக்கு மேலதிகமாக, குரல் பயிற்சியளிக்கும் ஐந்து பயிற்சி முறைகள் மற்றும் உடற்பயிற்சி இலக்குகளை மேம்படுத்துவதற்குமாக OPPO Watch வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உடற்தகுதி ஓட்டம், கொழுப்பை குறைக்கும் ஓட்டம், வெளியில் நடத்தல், வெளியில் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவற்றை இதில் குறிப்பிடலாம்.

ஸ்மார்ட்டான மின்கல பயன்பாட்டு முகாமைத்துவம் மூலம், OPPO Watch 46mm ஸ்மார்ட் கைக்கடிகாரமானது, 36 மணி நேரம் வரையான மின்கல ஆயுளை வழங்கி ஸ்மாரட்டாக மின்சக்தியை வழங்குகிறது. OPPO Watch 41mm ஆனது, WiFi தொழில்நுட்பத்தை கொண்டதாக வருகிறது. இது Black (கறுப்பு), Pink Gold (தங்க இளஞ்சிவப்பு) Silver Mist (வெள்ளிப் பனி) ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. அத்துடன் OPPO Watch ஆனது பரந்த அளவிலான வண்ண மணிக்கட்டு பட்டிகளையும், வெவ்வேறு வகையான மூலப்பொருட்களினாலும், வெவ்வேறு பாணிகளிலும் வருகின்றது. இவ்வாறு அதன் பட்டியை கழற்றி மாற்றுவதற்கு, அதில் தனித்துவமான ஒரு பொத்தான் காணப்படுவதோடு, அதனை அழுத்துவதன் மூலம் பட்டிகளை ஒன்றிலிருந்து ஒன்று உடனடியாக மாற்றலாம்.

வயர்லெஸ் சார்ஜிங், தொழில்முறை ஒலித் தரம், அதி குறைந்த தாமதம், நுண்ணுணவர்வு மிக்க தொடு கட்டுப்பாடுகள் போன்ற தற்காலத்தில் அவசியமாகும் அனைத்து விதமான அம்சங்களையும் Enco W51 வழங்குகின்றது. இதன் மூலம் ஆச்சரியமளிக்கும் விரிவான அனுபவத்தை உருவாக்கி, எந்தவொரு பயண சூழ்நிலையிலும் அல்லது காற்று வீசும் சூழலிலும் சிறப்பாக செயல்படுகிறது. W51 ஆனது, மிகவும் செலவு குறைந்த, பரந்த நுகர்வோர் சந்தையைக் கொண்ட, கம்பியற்ற நிகர்மெய்யான இரைச்சலை இரத்துத் செய்யும் அனுபவத்தை அனுபவிக்க உறுதியளிக்கிறது.

OPPO ஒலி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D) குழுவானது, அதிநவீன இரைச்சல் குறைப்பு திறன்களை மேம்படுத்துவது தொடர்பில் அயராது பாடுபட்டு வருவதோடு, இசை மற்றும் அழைப்பு இரைச்சலை குறைப்பத்தில் இரு மடங்கு முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இத்தொழில்நுட்பமானது, பின்னணி சூழலையோ, அமைதியையோ பொருட்படுத்தாது, பாடல்கள், விளையாட்டுகள் மற்றும் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை இரசிக்கவும் முக்கியமாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளவும் பயனர்களுக்கு அனுமதியளிக்கிறது.

ஒக்டோபர் நடுப்பகுதியில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ள Enco W51 வயர்லெஸ் ஹெட்போன்கள் மற்றும் OPPO Watch ஆகியவற்றை, தற்போது முற்கூட்டியே பதிவு செய்யலாம். அத்துடன் அனைத்து முற்கூட்டிய பதிவுகளுக்கும் OPPO backpack (முதுகுப்பை) வழங்கப்படவுள்ளன. Enco W51 வயர்லெஸ் ஹெட்போன்கள் மற்றும் OPPO கைக்கடிகாரம் ஆகியன நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து OPPO விநியோகத்தர்கள் மற்றும் அபான்ஸ், Daraz இணையத்தள விற்பனை நிலையங்கள் மற்றும் சிங்ககிரி காட்சியறைகளில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...