ஊரடங்கு பகுதிகளில் நாளை இரவு 10 மணி வரை கடைகள் திறப்பு

ஊரடங்கு பகுதிகளில் நாளை இரவு 10 மணி வரை கடைகள் திறப்பு-Shops Open at Quarantine Curfew Area-8am to 10pm

தற்பொழுது தனிமைப்படுத்தல் சட்டம்‌ பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதேசங்களில், உணவுப்‌ பொருட்கள் விற்பனை செய்யும்‌ வர்த்தக நிலையங்கள்‌ மற்றும்‌ மருந்தகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை (16) காலை 8.00 மணி தொடக்கம்‌ இரவு 10.00 மணி வரை குறித்த வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுக்கும்‌ தேசிய செயற்பாட்டு மையம்‌ இதனை அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...