மல்வத்தையில் காட்டு யானைகள் அட்டகாசம்

மல்வத்தை கிராமத்தில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள் சம்மாந்துறை பிரதேச சபைக்கு சொந்தமான கடைத்தொகுதியில் மூன்று கடைகளின் கதவுகளை உடைத்து அங்கிருந்த வியாபாரப் பொருட்களை  யானைகள்  சேதப்படுத்தியுள்ளன.
 
காட்டு யானைகள்  கூட்டம் கூட்டமாக பகல் மற்றும் இரவு வேளையில் ஊருக்குள் உட்புகுந்து தோட்டங்கள், மரங்கள், குடிசைகள் மற்றும் மக்களின் உடைமைகளையும் சேதப்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பிரதேசத்தில் கடந்த மாதம் வயோதிபர் ஒருவர் பொன்னாங்கன்னி பறிக்க சென்ற  வேளை யானை தாக்கி உயிரிழந்துள்ள துயர சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கின்றனர்.
 
இவ்விடயம் தொடர்பில் குடியிருப்பு பிரதேசங்களுக்கு அண்மித்த பிரதேசங்களுக்கு வருகை தரும் யானைகளை கட்டுப்படுத்துவதற்கு வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கையும் விடுகின்றனர். 
 
(சவளக்கடை குறூப் நிருபர்)

 


Add new comment

Or log in with...