கைது செய்யப்படுவதை தடுக்குமாறு ரியாஜ் பதியுதீன் ரிட் மனு | தினகரன்

கைது செய்யப்படுவதை தடுக்குமாறு ரியாஜ் பதியுதீன் ரிட் மனு

கைது செய்யப்படுவதை தடுக்குமாறு ரியாஜ் பதியுதீன் ரிட் மனு-Riyaj Bathiudeen Filed a Writ Petition Seeking to Prevent His Arrest

தான் மீண்டும் செய்யப்படுவதை தடுக்கும் தடை உத்தரவை வழங்குமாறு கோரி, ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன், மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த ரிட் மனுவின் பிரதிவாதிகளாக பதில் பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் (2019 ஏப்ரல் 21) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்ட ரியாஜ் பதியுதீன், இவ்வருடம் ஏப்ரல் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டதோடு, 5 மாதங்கள் CIDயின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இவ்விடயம் தொடர்பில், CIDயினர் உரிய விதிமுறைகளை பேணவில்லை என, சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...