மைத்திரியிடம் 6 மணி நேர வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து, அவ்வாணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று (12) முன்னிலையாகியிருந்தார்.

இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாளை மறுதினம் (14) குறித்த ஆணைக்குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...