மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி | தினகரன்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி-Motor Cycle Accident-2 Killed-Horowpothana-Trincomalee

ஹொரவபொத்தானை - வவுனியா பிரதான வீதி மடுகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (08) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் ஹொரவபொத்தானை, வீரச்சோலை பகுதியைச் சேர்ந்த டி.எம். மாஹிர் (41)  மற்றும் ஏ.எம். நியாஸ் (34) ஆகிய இருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வவுனியாவிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி, குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது மடுகந்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை  இழந்து வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் வவுனியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...