திட்டமிட்டவாறு தரம் 5 புலமைப்பரிசில், A/L பரீட்சைகள் இடம்பெறும்

- கம்பஹா மாவட்ட மாணவர்களுக்கு விசேட ஏற்பாடுகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையும் திட்டமிட்டவாறு இடம்பெறும் என கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த இரு பரீட்சைகளும் திட்டமிட்டவாறு சுகாதார பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைய இடம்பெறும் எனவும், அவர் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்திலுள்ள மாணவர்களுக்கும் கம்பஹா மாவட்டத்தில் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


Add new comment

Or log in with...