கொரோனா பாதிப்பை கண்டறிய இதுவரை 7.19 கோடி மாதிரிகள் சோதனை- ஐசிஎம்ஆர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 7.09 இலட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59 இலட்சத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை உயர்ந்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 7.19 கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றை கண்டறிவதற்காக செப்டம்பர் 27 ம் திகதி வரை 7,19,67,230 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்றுமுன்தினம் மட்டும் 7,09,394 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 82,170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் அமெரிக்காவை தொடர்ந்து 2-ம் இடத்தில் நீடிக்கும் இந்தியா, புதிய பாதிப்புகள் மற்றும் குணமடைவோர் எண்ணிக்கையில் தினமும் கணிசமான அளவை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 82,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,74,703 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,039 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95,542 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 74,893 பேர் வெளியேறினர். இதன்மூலம் இதுவரை 50,16,521 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது இந்தியா முழுவதும் 9,62,640 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...