ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல்; பொடி லெசியின் வி.மறியல் நீடிப்பு

பாதாளக்குழு உறுப்பினராக கருதப்படும் ‘பொடி லெசி’ என அழைக்கப்படும் ஜனித் மதுசங்கவுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று (25) காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே, குறித்த விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.   

குறித்த சந்தேகநபர் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், சிறைச்சாலை அதிகாரிகளை அச்சுறுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக மாகந்துரே மதுஷ் மற்றும் சிறைச்சாலை ஆணையாளரிடம் அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...