டிரம்புக்கு வந்த விசம் தடவிய கடிதம் தொடர்பில் விசாரணை

அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் டிரம்பின் பெயருக்கு  அனுப்பப்பட்ட விசம் கொண்ட பொதி ஒன்றை வெள்ளை மாளிகைக்கு செல்லும் முன்னர் தடுத்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.  

வெள்ளை மாளிகைக்கான கடிதங்களின் சோதனையின் போதே கடந்த வாரம் இந்தக் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஆமணக்கு விதையில் இருந்து இயற்கையாகக் கிடைக்கும் விசம் இருப்பது தெரியவந்துள்ளது.  

இந்த விசம் வெளிப்பட்டால் 36தொடக்கம் 72மணி நேரத்தில் மரணம் ஏற்படக் கூடும்.  

கனடாவில் இருந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இது பற்றி உளவுப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

எனினும் இதனால் பொதுப் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.   வெள்ளை மாளிகைக்கு இது போன்ற நஞ்சு பொருட்கள் அடங்கிய கடிதங்கள் அனுப்பப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு நஞ்சுப்பொருள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்டது. கடிதம் அனுப்பிய நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    


Add new comment

Or log in with...