நீர் தேடியலைந்து கிணற்றுக்குள் வீழ்ந்த முதலையும் 12 குட்டிகளும் மீட்பு | தினகரன்

நீர் தேடியலைந்து கிணற்றுக்குள் வீழ்ந்த முதலையும் 12 குட்டிகளும் மீட்பு

நீர் தேடியலைந்து கிணற்றுக்குள் வீழ்ந்த முதலையும் 12 குட்டிகளும் மீட்பு-Crocodile And 12 Hatching Rescued in Well-Vavuniya

தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக நீர்நிலைகளை தேடியலைந்த பன்னிரெண்டு குட்டி முதலைகளும், தாய் முதலையும் வவுனியா குருந்துபிட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு காட்டுபகுதிக்குள் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நீர் தேடியலைந்து கிணற்றுக்குள் வீழ்ந்த முதலையும் 12 குட்டிகளும் மீட்பு.-Crocodile And 12 Hatching Rescued in Well-Vavuniya

இவ் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்று (19) காலை காணி உரிமையாளரினால் தோட்டத்திலுள்ள கிணற்றை சுத்தம் செய்வதற்காக சென்ற போது ஒரு முதலை இருப்பதை கண்டார்.  பின்னர் அப்பகுதி மக்களின் உதவியுடன் முதலை மீட்கப்பட்டுள்ளது. மேலும் 12 குட்டிகளையும் கிணற்றில் இருந்து மீட்டிருந்தனர்.

நீர் தேடியலைந்து கிணற்றுக்குள் வீழ்ந்த முதலையும் 12 குட்டிகளும் மீட்பு.-Crocodile And 12 Hatching Rescued in Well-Vavuniya

மீட்கப்பட்ட 12 குட்டி முதலைகளையும் ஒரு பெரிய முதலையையும் அப்பகுதி மக்களால் பாதுகாப்பாக காட்டு பகுதியில் விடுவித்திருந்தனர்.

வறட்சியான காலநிலையால் முதலைகள் குருந்துபிட்டிய குளத்தில் நீர் நிலைகள் வற்றி காணப்படுவதனால்  அங்கிருந்து வெளியேறி நீர்நிலைகளை தேடி சென்றதனாலேயே கிணற்றிற்குள் வீழ்ந்திருப்பதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

நீர் தேடியலைந்து கிணற்றுக்குள் வீழ்ந்த முதலையும் 12 குட்டிகளும் மீட்பு.-Crocodile And 12 Hatching Rescued in Well-Vavuniya

(ஓமந்தை விஷேட நிருபர்)

Add new comment

Or log in with...