டிக்கோயா தரவளையில் விபத்து | தினகரன்

டிக்கோயா தரவளையில் விபத்து

ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாஞ்சிமலை பிரதான வீதியின் டிக்கோயா தரவளை பகுதியில் வேன் ஒன்றும் லொறியும் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

போடைஸ் பகுதியில் இருந்து ஹற்றன் நோக்கி பயணித்த சிறியரக லொறி ஒன்றும் ஹற்றன் பகுதியில் இருந்து போடைஸ் பகுதியினை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் பயணித்த எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. வாகனம் இரண்டுக்கும் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஹற்றன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்


Add new comment

Or log in with...