மத நிந்தனை குற்றச்சாட்டில் நைஜீரிய சிறுவனுக்கு சிறை

நைஜீரியாவில் இஸ்லாமிய நீதிமன்றம் ஒன்றினால் 13 வயது சிறுவனுக்கு மதநிந்தனை குற்றச்சாட்டில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனையை மீள் பரிசீலனை செய்யும்படி ஐ.நா சிறுவர் அமைப்பான யுனிசெப் நைஜீரிய நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

வடக்கு கானோ மாநிலத்தில் நண்பர் ஒருவருடன் விவாத்தில் ஈடுபட்டிருந்தபோது இறைவன் பற்றி அவமதிக்கும் கருத்துகளை கூறியதாகவே இந்த சிறுவனுக்கு கடந்த மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் மதச்சார்பற்ற சட்டத்திற்கு மத்தியில் ஷரியா சட்டத்தை பின்பற்றும் 12 மாநிலங்களில் ஒன்றாக கானோ உள்ளது. நாட்டின் வடக்கு பகுதியில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக உள்ளனர்.

“13 வயது சிறுவன் மீதான தண்டனை, நைஜீரியாவில் சிறுவர் உரிமை மற்றும் சிறுவர் நீதி தொடர்பிலான அனைத்து அடிப்படை கொள்கைகளையும் மீறுவதாக உள்ளது” என்று நைஜீரியாவின் யுனிசெப் பிரதிநிதி பீட்டர் ஹோகின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக கடந்த செப்டெம்பர் 9 ஆம் திகதி மேன்முறையீடு செய்ததாக அந்தச் சிறுவனின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...