மோடியின் 70 ஆவது பிறந்த தினம்: பிரதமர் மஹிந்த தொலைபேசியில் வாழ்த்து

தந்தையாகி விட்ட நாமலுக்கும் மோடி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தொலைபேசியில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். நேற்று மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மஹிந்த, இந்தியப் பிரதமரிடம் நலம் விசாரித்ததுடன் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் அவருக்குத் தெரிவித்தார். பிரதமர் மஹிந்தவிற்கு நன்றி தெரிவித்த நரேந்திர மோடி, பிரதமரின் குடும்பத்தில் புதிய வாரிசாக பிறந்துள்ள நாமல் ராஜபக்‌ஷவின் மகனுக்கும் தனது வாழ்த்தையும் மகிழ்வையும் தெரிவித்துள்ளார். இரு தலைவர்களும் பரஸ்பரம் நாட்டு நடப்பு மற்றும் கொரோனாவின் தற்போதைய நி​ைலவரம் குறித்தும் தமது உரையாடலில் பகிர்ந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...