அம்பன் புயலினால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 52.98 பில்லியன் நஷ்டஈடு

அம்பன் புயலினால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 52.98 பில்லியன் நஷ்டஈடு-Cabinet Approval for Rs 52.98 Billion For Amphan Cyclone Affected People in Jaffna

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2020 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரையில் 04 நாட்கள் காணப்பட்ட அம்பன் புயலின் காரணமாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய், தெல்லிப்பழை மற்றும் கரவெட்டி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 2,374 விவசாயிகளின் வாழைத்தோட்டம் மற்றும் பப்பாசி உற்பத்திகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டதுடன் இதன்போது ஏற்பட்ட மொத்த இழப்பு 52.98 மில்லியன் ரூபா என்ற ரீதியில் யாழ் மாவட்ட செயலாளர்/ மாவட்ட அரசாங்க அதிபர்களினால் அறிக்கையிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக விவசாய அமைச்சினதும் இடர் முகாமைத்துவ விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சினதும் யாழ் மாவட்ட செயலகத்தினதும் ஒருங்கிணைப்புடனான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்கு தேவையான 52.98 மில்லியன் ரூபா நிதியை இடர் முகாமைத்துவ விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சின் ஊடாக மேலதிக மானியம் என்ற ரீதியில் யாழ் மாவட்ட செயலாளர்/ மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்குவதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...