நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார் | தினகரன்

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்-நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்

இந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்.

நடிகர் வடிவேலுவைப் போன்று ஆரம்ப காலத்தில் நடித்ததன் மூலம் வடிவேல் பாலாஜி என பெயர் பெற்றவர் வடிவேல் பாலாஜி.

இந்திய தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது நகைச்சுவை திறமையால் அனைவரையும் சிரிக்க வைத்த வடிவேல் பாலாஜி, திடீர் மாரடைப்பு காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (10) மரணமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

42 வயதான வடிவேல் பாலாஜி, கடந்த 15 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், விஜய் டிவியின் அது, இது, எது எனும் நிகழ்ச்சியில் வரும் ஒரு அங்கமான சிரிச்சா போச்சி எனும் பகுதியின் மூலம் பிரபலமான வடிவேல் பாலாஜி, கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தனது நகைச்சுவை ஆற்றலை வெளிப்படுத்தி வந்தார்.

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் அவர் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவைக் கேள்வியுற்ற அவருடன் பணியாற்றும் நகைச்சுவை நடிகர்கள், திரையுலக பிரபலங்கள் ஆகியோர் தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வடிவேல் பாலாஜி, 5 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்திருக்கிறார். இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் மீண்டும் மாரடைப்பு ஏற்பட, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அங்கே மருத்துவச் செலவுகள் அதிகரித்துக்கொண்டு சென்ற நிலையில், மற்றுமொரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றவர்கள், அங்கும் சரிவர பார்க்கமுடியாமல், அரசாங்க மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இந்நிலையிலேயே அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

''பாலாஜி சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்தவர். பிணவறையில் போஸ்ட்மார்ட்டம் பண்ற டிப்பார்ட்மென்ட்ல வேலை பார்த்தார். அங்க வேலை பார்த்துக்கிட்டே 'கலக்கப்போவது யாரு சீசன் 4', 'அது இது எது' நிகழ்ச்சிகள் பண்ண ஆரம்பிச்சார். எப்படி அங்க பிணங்களை போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டே இங்க வந்து காமெடி பண்ணிட்டு இருக்கார்னு ஆச்சர்யமா இருக்கும்." என்கிறார் 'கலக்கப்போவது யாரு?' நிகழ்ச்சியின் இயக்குநரும், பாலாஜியின் நண்பருமான தோம்சன்.

"வடிவேல் மாதிரி பண்ற பல பேர் மத்தியில பாலாஜி மட்டும்தான் நல்லா ரீச்சானார். அதுக்குக் காரணம் வடிவேல் மாதிரி அப்படியே பாலாஜி பண்ணாததுதான். அவரோட மாடுலேஷனை மட்டும் வச்சுக்கிட்டு ஸ்பாட்ல செமையா கலாய்ச்சி வித்தியாசமா பண்ணி எல்லோரையும் சிரிக்கவெச்சிடுவார். அப்படித்தான் பாலாஜி அதிகமான மக்களை ரசிக்க வச்சார்."

இரண்டு வாரங்களுக்கு முன்னாடி ரெண்டாவது ஹார்ட் அட்டாக் வந்துச்சு. அப்ப கையும் காலும் பேரலைஸ் ஆகிடுச்சு. காசு பிரச்னையால் தொடர்ந்து மருத்துவமனைகளை மாத்திக்கிட்டே இருக்கவேண்டியதா இருந்தது. இன்னைக்கு காலைல அரசு மருத்துவமனையில உயிர் பிரிஞ்சிடுச்சு'' என மேலும் தெரிவித்தார் தோம்சன்.

மறைந்த நடிகர் பாலாஜி மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.


Add new comment

Or log in with...