அரச ஊடகங்களுக்கு 25% விளம்பரங்கள் வழங்குவது கட்டாயம்

அரச ஊடகங்களுக்கு 25% விளம்பரங்கள் வழங்குவது கட்டாயம்-25 pcnt Advertisement for Government and Semi Government-Cabinet Decision

அரச மற்றும் நியதிச்சட்ட அரச நிறுவனங்களினால் வெளியிடப்படும் அறிவித்தல்கள் மற்றும் விளம்பரங்களுக்கு அரச ஊடக நிறுவனங்களைப் பயன்படுத்த, அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அரச ஊடக நிறுவனங்களில், அரச வரவு செலவில் சுமையற்ற வகையில் நடாத்திச் செல்லும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அதற்கமைய, அரச மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களினால் (Semi Government) வெளியிடப்படும் அறிவித்தல்கள் மற்றும் விளம்பரங்களில் 25% ஆனவற்றை, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு, லேக் ஹவுஸ் நிறுவனங்களில் கட்டாயம் வழங்க வேண்டும் என அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

நேற்று (09) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த பிரேரணை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...