தலதா மாளிகை இணையத்தளம் வழமைக்கு | தினகரன்

தலதா மாளிகை இணையத்தளம் வழமைக்கு

தலதா மாளிகை இணையத்தளம் வழமைக்கு-Hacked SriDaladaMaligawa Website Back to Normal

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக, அதன் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நேற்று (31) இரவு sridaladamaligawa.lk எனும் குறித்த இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல், நைஜீரியாவிலிருந்து ஹேக்கர்களால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வந்துள்ளதாக, தலதா மாளிகையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த இணையத்தளம் மீது நேற்று (31) இரவு 9.00 மணியளவில் இரண்டு சந்தர்ப்பங்களில் இணைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் அதனை மீட்ட, தலதா மாளிகையின் தொழில்நுட்ப பிரிவினர், ஒரு சில மணித்தியாலங்களில் அதனை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இது தொடர்பில், இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுடன் இணைந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...