Monday, August 31, 2020 - 5:20pm
வடமேல் மாகாண ஆளுநராக இருந்த ஏ.ஜே.எம்.முஸம்மில், ஊவா மாகாண ஆளுநராக இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை, ஊவா மாகாண ஆளுநராக இருந்த ராஜா கொல்லூரே, வடமேல் மாகாண ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
Add new comment