மஹேல தலைமையில் தேசிய விளையாட்டு கவுன்சில் நியமனம்

மஹேல தலைமையில் தேசிய விளையாட்டு கவுன்சில் நியமனம்-National Sports Council Appointed by Namal Rajapaksa

- குமார் சங்கக்கார, ஷவேந்திர சில்வா உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக நியமனம்

தேசிய விளையாட்டு கவுன்சிலுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர்‌ மற்றும்‌ விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிராமிய மற்றும்‌ பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள்‌ மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்‌ தேனுக விதானகமகே ஆகியோர் இணைந்து நியமித்துள்ள இச்சபையின் அங்கத்தவர்களாக, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் மஹேல ஜயவர்தன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு தொடர்பான கொள்கை விடயங்களில், விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக, தேசிய விளையாட்டு கவுன்சிலானது செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சபையின் ஏனைய உறுப்பினர்கள்; ஜூலியன் போலிங், குமார் சங்கக்கார, டிலந்த மாலகமுவ, கஸ்தூரி செல்லராஜா வில்சன், சுபுன் வீரசிங்க, ரொஹான் பெனாண்டோ, ருவன் கேரகல, சஞ்சீவ விக்ரமநாயக்க, மேஜர் ஜெனரல் ராஜித அபேமொஹொட்டி, லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, ரொவேனா சமரசிங்க. யஸ்வந்த முத்தேதுவகமக, ஏ.ஜே.எஸ்.எஸ். எதிரிசூரிய, தியூமி அபேசிங்க


Add new comment

Or log in with...