மைத்திரிக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அழைப்பு

மைத்திரிக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அழைப்பு-PCoI Easter Attack Police Unit-Summoned Maithripala Sirisena

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் எதிர்வரும் 26 ஆம் திகதி முன்னிலையாகி, வாக்குமூலம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் சட்ட, ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோரை எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் (21), முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை நாளையதினமும் (18) குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகுமாறு கடந்தவாரம் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...