கொவிட்−19 தடுப்பு மருந்தினை பெற அமெரிக்கா முண்டியடிப்பு

மொடர்னா நிறுவனம் தயாரிக்கும் கொவிட்–19 தடுப்புமருந்தை வாங்குவதற்கு அமெரிக்கா 1.5 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளது.

தடுப்புமருந்துகளின் செயல்திறன் நிரூபிக்கப்பட்டு, அவை அங்கீகாரம் பெற்ற பின்னர் 100 மில்லியன் தடுப்பூசிகளை மொடர்னா நிறுவனம் அமெரிக்காவுக்கு வழங்கும்.

ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா மேலும் 400 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க முடியும். இறுதிக் கட்டச் சோதனையில் உள்ள அந்தத் தடுப்புமருந்தை அடுத்த மாதத்திற்குள் தயார்செய்வது மொடர்னா நிறுவனத்தின் திட்டம்.

ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கப்படும் ஆறு கொவிட்–19 தடுப்பூசிகளைப் பெறுவதற்காக சுமார் 11 பில்லியன் டொலர் மதிப்புள்ள முன்பதிவு ஒப்பந்தங்களை அமெரிக்கா செய்துள்ளது.

மொடர்னா மேம்படுத்தி வரும் தடுப்பு மருந்து தற்போது இறுதிக் கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு மருத்துகளில் ஒன்றாக உள்ளது. 30,000 பேர் மீது இந்த மருந்து சோதனை செய்யப்பட்டு வருவதோடு அது வரும் செப்டெம்பர் மாதம் பூர்த்தியாகும் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...