யாழில் பெண்ணின் எலும்புக்கூடு, ஆடைகள் கண்டுபிடிப்பு | தினகரன்


யாழில் பெண்ணின் எலும்புக்கூடு, ஆடைகள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம், பண்ணை டெலிகொம் பின் பக்கத்தில் உள்ள கடற்றொழில் சாலை வளாகத்தில் இருந்து பெண் ஒருவரின்  எலும்புக்கூடு மற்றும் ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடற்றொழில் சாலை வளாகத்தில் கூடாரம் ஒன்று அமைப்பதற்காக இன்று (14) காலை குழி தோண்டியபோது, அக்குழியில் எலும்புக்கூடுகள் மற்றும் பெண்ணின் ஆடைகள் கிடைத்துள்ளன.

அவற்றை அவதானித்தவர்கள், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன்,  யாழ். மாநகர சுகாதார பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

அத்தகவலின் பிரகாரம், யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெனாண்டோ மற்றும் யாழ். பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன்,  யாழ். மாநகர பிரதி முதல்வர், கிராம சேவையாளர் உள்ளிட்டவர்கள் வந்து பார்வையிட்டனர்.

அத்துடன் பொலிஸாரால் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதுடன், எலும்புக்கூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர்– சுமித்தி தங்கராசா)


Add new comment

Or log in with...