பிரதமரின் செயலாளராக மீண்டும் காமினி செனரத்

பிரதமரின் செயலாளராக காமினி செனரத் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரியான காமினி சேதர செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது நியமனக் கடிதத்தை இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்விடமிருந்து பெற்றுக்கொண்டார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது மேலதிக செயலாளராகவும், ஜனாதிபதியின் பணிக்குழாமின் பிரதானியாகவும் கடமையாற்றிய காமினி செனரத், 2019 நவம்பர் மாதம் 21ஆம் திகதி மஹிந்த ராஜபக் மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான காமினி செனரத் 1984ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணினி தொழிநுட்பத்தில் பட்டப்பின்படிப்பு பட்டத்தை பெற்றுள்ள அவர், பல்வேறு வெளிநாட்டு கற்கை நெறிகளையும் பூர்த்தி செய்துள்ளார்.


Add new comment

Or log in with...