'ஜனநாயக பாரம்பரியம் மேலும் வலுவாகியுள்ளது' | தினகரன்


'ஜனநாயக பாரம்பரியம் மேலும் வலுவாகியுள்ளது'

இலங்கையின் நீண்டகால ஜனநாயக பாரம்பரியத்தை இந்த தேர்தல் மேலும் வலுப்படுத்தி உள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய  ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை விடுத்துள்ள ஜப்பான் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

ஜப்பான் அரசாங்கத்தின் சார்பில், கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் நீண்டகால ஜனநாயக பாரம்பரியத்தை, இந்தத் தேர்தல் மேலும் வலுப்படுத்தியுள்ளது.

அமைதியான, சுதந்திரமான, நியாயமான தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டமை தொடர்பாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதோடு,  இலங்கையின் வளர்ச்சிக்கு மேலும் உதவிகளை வழங்க ஜப்பான் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியா, நேபாளம், மாலைதீவு, அமெரிக்கா ஆகிய நாடுகளும் வாழ்த்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கு இடையில் அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவை வலுப்படுத்த நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என, ட்விற்றர் செய்தியொன்றை விடுத்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

கொவிட்-19 தொற்றுநோயால் சவால்கள் காணப்பட்ட போதிலும்,  அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் தேர்தல் இடம்பெற்றமை தொடர்பில், இலங்கைக்கு வாழ்த்து தெரிவிப்பதாக, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...