கழுகை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்க உத்தரவு | தினகரன்

கழுகை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்க உத்தரவு

பாதாள குழுவொன்றின் தலைவராக கருதப்படும் அங்கொட லொக்காவினால், போதைப்பொருள் விநியோகத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கழுகை, தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேல்மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மீகொடை, நாவலமுல்ல மயான வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் கூட்டில் அடைக்கப்பட்டிருந்தபோது, குறித்த கழுகு நேற்று  (30) மீட்கப்பட்டது.

இக்கழுகு இன்று (31) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில், அத்துருகிரிய பொலிஸாரினால் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


Add new comment

Or log in with...