காற்று, தொடர் மழை; 1,200 ஏக்கர் வேளாண்மை அறுவடை பாதிப்பு

திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பகுதியில் கரையான் பிலவு, மற்றும் ஐயாத்தை போன்ற விவசாய சம்மேளத்தின் கீழ்  செய்கை பண்ணப்பட்ட  சிறுபோக வேளாண்மை   அறுவடைக்கு  தயாரான நிலையில் கடும் காற்றினாலும் தற்போது பெய்து அடைமழை காரணமாகவும் 1200  இற்கும் மேற்பட்ட  ஏக்கர்  நீரில் மூழ்கிய நிலையில் கைவிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் நேற்று  முன்தினம் (27) மாலை 5.00 மணி  தொடக்கம் நேற்று   (28) காலை வரை கடும் காற்றுடன் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது.

இதில் கரையான் பிலவு விவசாய சம்மேளனத்தின் கீழ் 650 ஏக்கரும், ஐயாத்தை விவசாய சம்மேளனத்தின் கீழ் 450 ஏக்கரும் சிறுபோகத்திற்கான வேளாண்மை செய்கை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று  முன்தினம் (27) அடம்படிப் பேட்டை விவசாய சம்மேளனத்தின் கீழ் உள்ள சுமார்  250 ஏக்கர் வேளாண்மை  அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மிகவும் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட விவசாய நிலங்களை விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டுள்ளதுடன் இன்று  காலையும் ஏனைய பகுதிகளை பார்வையிடுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கரையான் பிலவு விவசாய சம்மேளனத்தின் தலைவர் எஸ்.இஸ்ஸதீன் தெரிவித்தார்.

(திருமலை மாவட்ட விசேட நிருபர் - ஏ.எம் .ஏ.பரீட்)


Add new comment

Or log in with...