சிறைக்கு பொருட்கள் வீசும் பிரதான சந்தேகநபர் கைது | தினகரன்

சிறைக்கு பொருட்கள் வீசும் பிரதான சந்தேகநபர் கைது

வெலிக்கடை சிறைச்சாலையினுள் ஹெரோயின் மற்றும் தொலைபேசி வீச முயற்சித்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீவலி பிரதேசத்தில் வைத்து இச்சந்தேகநபர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை தொடர்ந்து, இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொரளை, சீவலிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு, இச்சந்தேகநபரிடமிருந்து 10  கிராம் ஹெரோயின், 03 கையடக்கத் தொலைபேசிகள், 06 கையடக்கத் தொலைபேசி பற்றரிகள், 110 கிராம் புகையிலை, 01 Hand-free, 400 கிராம்  தேயிலை, 01 தைலம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 


Add new comment

Or log in with...